< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 Oct 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

சீரமைக்கப்பட்டது

கீழ ஆசாரிபள்ளத்தில் இருந்து பெருஞ்செல்வவிளைக்கு செல்லும் சாலையில் வெள்ளமண்ணோடை பகுதியில் சாலையின் குறுக்கே ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

வீணாகும் மின்சாரம்

அருமநல்லூரில் இருந்து வீரவநல்லூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் மாலையில் சுவிச்சை போட்டு விட்டு மறுநாள் காலையில் முறையாக அனைப்பது இல்லை. இதனால், பகல் முழுவதும் விளக்கு எரிவதால் மின்சாரம் வீணாகுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலையில் முறையாக விளக்கு சுவிச்சை அனைத்து மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சண்முகம், கடுக்கரை.

விபத்து அபாயம்

ஆசாரிபள்ளத்தில் இருந்து பெருஞ்செல்வவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மேலே செல்லும் கேபிள் ஒயர் கம்பத்தில் இருந்து விடுபட்டு 2 நாட்களாக சாலையின் குறுக்கே கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சாைலயில் கிடக்கும் கேபிளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.ஆன்றணி, கீழஆசாரிபள்ளம்.

தொற்றுநோய் அபாயம்

நாகர்கோவில் பறக்கை பகுதியில் பாத்திமா நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் தாழ்வான இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முஹம்மது இப்திகார், பாத்திமாநகர், நாகர்கோவில்.

நோயாளிகள் அவதி

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள தார் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நோயாளிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

சுகாதார சீர்கேடு

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் இருந்து விளாங்காடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகில் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது ரபீக், திட்டுவிளை.

மேலும் செய்திகள்