< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 Oct 2022 4:04 PM GMT

புகார் பெட்டி

தூர்வார வேண்டும்

நாகர்கோவில் பார்வதிபுரம் பெருவிளை முத்தாரம்மன் கோவில் பச்சைகுளம் உள்ளது. சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, பெருவிளை.

சேதமடைந்த மின்கம்பம்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட தும்பகாட்டுவிளை பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் பாதையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மேற்பகுதி மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லுபவர்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரசாந்த், குளச்சல்.

மரத்தை அகற்ற வேண்டும்

கீழ்குளம் சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தேங்காப்பட்டணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே மாமரம் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றது. எப்போது வேண்டுமானாலும் மரம் விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசாக், இனயம்.

துர்நாற்றத்தால் மக்கள் அவதி

நாகர்கோவில் சிதம்பரநகர் பகுதியில் சாலையோரத்தில் வடிகால் ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஓடைகளை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயந்தி, சிதம்பரநகர்.

விபத்து அபாயம்

இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார்கோவிலில் இருந்து சீதைக்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் கோவில்விளை பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், ஆழ்வார்கோவில்.

சாலையை சீரமைக்க வேண்டும்

கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலவிளையில் இருந்து பெருமாங்குளம் வழியாக கருங்கல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.பழனிவேல், பாலவிளை.

மேலும் செய்திகள்