< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
1 Oct 2022 1:32 PM GMT

புகார் பெட்டி

ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் வடக்கு 1-வது வார்டு தென்வடல் தெரு பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் சரியான பாதை வசதியின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹரிஸ், பட்டணம்காத்தான்.

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை ஊராட்சி பள்ளி அருகே உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது. தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதன், கமுதி.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே தினமும் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இதனால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதிடைகின்றனர். எனவே இந்த பகுதியில் சீரான போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, ராமநாதபுரம்.

நடவடிக்கை வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வீரசோழன் சாலை பகுதியில் அமைந்துள்ள மயானம் அருகில் கண்மாய், விவசாய நிலம் உள்ளது. இந்த பகுதியில் சிலர் மது அருந்திவிட்டு மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் மற்றும் கப் முதலியவைகளை கண்மாயில் வீசி செல்கின்றனர். இதனால் கண்மாய் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம், அபிராமம்.

கரடு முரடான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தில் இருந்து இருட்டூரணி இரட்டையூரணி இணைப்பு சாலையிலிருந்து கும்பரம் செல்லும் சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக பயணிக்கும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன், ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்