< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 Sep 2022 7:55 PM GMT

புகார் பெட்டி

சீரமைக்கப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஹென்றிசாலையில் பாதாளசாக்கடைக்காக போடப்பட்ட மூடி சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மூடியை அகற்றி விட்டு புதிய மூடியை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

விபத்து அபாயம்

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து முடிந்தது. ஆனால், அந்த பகுதியில் தார்சாலை அமைக்கப்படாமல் மணலுடன் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், கோட்டார்.

நடவடிக்கை ேதவை

கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி வரும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் இந்த பஸ்நிறுத்தத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் பயணிகள் பெரும் அச்சத்துடனேயே நிற்கின்றனர். எனவே, சேதமடைந்த பஸ்நிறுத்தத்தின் மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணபிள்ளை, நாகர்கோவில்.

பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

மடவிளாகத்தில் இருந்து கண்டன்விளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் சிமெண்டு சிலாப்புகள் அமைக்கபட்டு இருந்தது. இந்த சிலாப்புகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பாரத்தால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும்போது விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கண்டன்விளை.

விஷ வண்டுகள் அழிக்கப்படுமா?

நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு நுள்ளிவிளையில் ஒரு தனியார் தென்னந்ேதாப்பு உள்ளது. இந்த தோப்பின் அருகில் உள்ள கால்வாயின் ஒரு பகுதியில் விஷ வண்டுகள் ராட்சத கூடு கட்டி உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, விஷ வண்டுகளின் கூட்டை அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராஜ், வடக்கு நுள்ளிவிளை.

நடவடிக்கை எடுப்பார்களா?

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஏழை மக்கள் நலன் கருதி சரியான எடையில் பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-செல்விராணி, ஒழுகினசேரி.

மேலும் செய்திகள்