< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
29 Sep 2022 3:46 PM GMT

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தில் இருந்து கும்பரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழித்தடத்தில் மயானம் முதலான அத்தியாவசிய வழித்தடங்கள் இருப்பதால் இந்த வழித்தடத்தில் பயணிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையில் வெளியேறும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் ராஜவீதி, தலைமை தபால் அலுவலகம் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகனஓட்டிகளுக்கு இடையூறு

ராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இ.சி.ஆர். சாலையில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. காற்றில் குப்பைகள் பறந்து வாகனஓட்டிகள், பொதுமக்கள் மீது சிதறி இடையூறு ஏற்படுத்துகின்றது. தேங்கிய குப்பைகளால் சாலை சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்கிய கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிக்கு உட்பட்ட திடல் பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ் அருகில் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குவிந்து கிடக்கும் குப்பை

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில இடங்கள் குப்பை குவியலாக காணப்படுகிறது. தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை தேங்கவிடாமல் அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்