< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 Sep 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சீவலப்பேரியன் கோவில் அருகில் சாலையோரம் முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு ஒதுங்க முடியாமல் சிரமப்படுவதாக `தினந்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் திருக்குமரன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முட்புதர்களை அகற்றி உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

கடையம் அருகே பொட்டல்புதூர் மேல பஸ்நிறுத்தம் அருகில் இருந்து பொட்டல்புதூர் ராமநதி ஆற்றுப்பாலம் அருகில் வரை சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் உள்ள பள்ளங்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

பழுதடைந்த நன்மைக்கூடம்

கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் தெற்கு கழுநீர்குளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நன்மைக்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கட்டிடம் தற்போது பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உடனடியாக அந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

-செல்வன், கழுநீர்குளம்.

கம்பிவலையை அகற்ற வேண்டும்

தென்காசி புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான மரங்களுக்கு அமைக்கப்பட்ட கம்பி வலை 10 ஆண்டு ஆகியும் அகற்றப்படவில்லை. இதனால் மரங்கள் இருகிவிட்டது. எனவே, கம்பி வலையை அகற்ற வேண்டும்.

-காசிராஜன், தென்காசி.

மோசமான சாலை

வீ.கே.புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் கீழ பஸ்நிறுத்தத்தில் இருந்து கிருஷ்ணன் கோவில் வரையில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த சாலை மெயின் சாலையாகவும் உள்ளது. எனவே, சாலையை செப்பனிட வேண்டுகிறேன்.

-தட்சணாமூர்த்தி, கீழக்கலங்கல்.


மேலும் செய்திகள்