< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
10 Sep 2022 5:14 PM GMT

புகார் பெட்டி

வாகன ஓட்டிகள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் ஊராட்சி அருகே அய்யனார்புரம் கிராமத்தில் சாலை வசதி கிடையாது. இதனால் மழை பெய்தால் சாலையில் நீரானது தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், கமுதி.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள சாலையோரங்களில் வாடகை கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிமுத்து, ராமேசுவரம்.

வாகன காப்பகம் வேண்டும்

ராமநாதபுரம் பஜார் பகுதிகளான அரண்மனை ரோடு, சாலைத்தெரு, வண்டிக்காரத்தெரு ஆகிய இடங்களில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு வாகனங்களை நிறுத்த இடவசதி கிடையாது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளனது. எனவே இப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வாகன காப்பகம் ஏற்படுத்த வேண்டும்.

காட்டரசு, ராமநாதபுரம்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடாளை அருகே புல்லூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சிஅளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தபகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதித்யா, புல்லூர்,ராமநாதபுரம்.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே திருஉத்தரகோசமங்கை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பலகிலோ மீட்டர் தூரம் சென்று நீரை எடுத்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவும்குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புஷ்பம், திருஉத்தரகோசமங்கை.

மேலும் செய்திகள்