< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
10 Sep 2022 3:37 PM GMT

புகார் பெட்டி

குரங்குகள் அட்டகாசம்

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை மரங்களில் உள்ள இளநீர், பப்பாளி உள்ளிட்டவைகளை பறித்து சேதப்படுத்துகின்றன. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை அள்ளிச் செல்கின்றன. அவற்றை விரட்ட முயற்சிப்பவர்களை கடிக்க வருகிறது. இதனால், பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். எனவே, அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோதீந்திரன், பத்மநாபபுரம்.

கழிவறை சீரமைக்கப்படுமா?

திக்கணங்கோடு ஊராட்சியில் மீன் சந்தை அமைந்துள்ளது. இந்த மீன்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை முறையாக பராமரிக்காததால் மிகவும் சேதமடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சந்தையில் உள்ள வியாபாரிகள், மீன்களை வாங்க வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவறையை சீரமைத்து சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கேசவன், திக்கணங்கோடு.

விபத்து அபாயம்

விவேகானந்தபுரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சுக்குபாறை ெரயில்வே கிராசிங் மேல்புறத்தில் சாலையோரத்தில் 2 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனல், அந்த வழியாக வரும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதில் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்களை அகற்றி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராமதாஸ், சந்தையடி.

வீணாகும் குடிநீர்

அறுகுவிளை பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின் அருகில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து கொண்டிருந்கிறது. இதனால், வீடுகளுக்கு வரும் குடிநீர் கலங்கி சுகாதாரமற்ற நிலையில் வருகிறது. குழாய் உடைப்பால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், அறுகுவிளை.

உயிர்பலி வாங்கும் பள்ளம்

கருங்கல் கருமாவிளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து வெள்ளியாவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலியாக வாய்ப்புகள் உள்ளது. எனவே, உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமீன், குளச்சல்.

மேலும் செய்திகள்