< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 Sep 2022 4:06 PM GMT

புகார் பெட்டி

விபத்து அபாயம்

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட அருமநல்லூர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளுக்கான மின் இணைப்பு பெட்டி அங்குள்ள ஒரு கம்பத்தில் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டு திறந்து கிடக்கிறது. சிறுவர்கள் தொட்டுவிடும் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை மின்கம்பத்தில் உயரமான இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.குமார், அருமநல்லூர்.

சேதமடைந்த சாலை

கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட செருப்பன்கோட்டில் இருந்து கீழக்கட்டிமாங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், கட்டிமாங்கோடு.

நிரந்தர தீர்வு காணப்படுமா?

ஆத்திக்காட்டுவிளை சந்திப்பு பகுதியில் சாலையில் கூட்டுக்குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்தது. பின்னர், அதிகாரிகள் குழாய் உடைப்பபை சீரமைத்தனர். ஆனால், குழாய் உடைப்பபை முறையாக சீரமைக்காகததால் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை முறையாக சீரமைத்து நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.

கழிவுகள் அகற்றப்படுமா?

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வளர்நகரில் இருந்து வட்டக்கோட்டை நான்கு வழிச்சாலை செல்லும் சாலையோரத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் பள்ளிக்கூடமும், மேல கருங்குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயும் உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்றுவார்களா?.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

சீரான குடிநீர் தேவை

கக்கோட்டுத்தலை ஊராட்சிக்கு உட்பட்ட தெக்கன்திருவிளை பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜான் ஆன்டணி, தெக்கன்திருவிளை.

சாலையை சீரமைக்க வேண்டும்

குளப்புறம் பஞ்சாயத்து உட்பட்ட கல்லறைக்காடு பகுதியில் இருந்து அன்னிக்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகுல், கல்லறைக்காடு.

மேலும் செய்திகள்