< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
3 Sep 2022 3:21 PM GMT

புகார் பெட்டி

தொற்றுநோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் நகரில் உள்ள பாம்பூரணி முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஊருணி நீர் மாசடைந்து உள்ளதால் இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு நீரின்றி அவதியடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஊருணியை தூர்வாரி நீர் மாசடைவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள்,ராமநாதபுரம்.

வாகனஓட்டிகள் சிரமம்

ராமநாதபுரம் நகரில் விநாயகர் சிலைகளை கரைக்க வசதியாக நகருக்குள் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதன் காரணமாக மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்லும் பள்ளிக்கூட வாகனங்கள் வழக்கமான பாதையில் பயணிக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே, இனிவரும் காலங்களில் இத்தகைய சிரமத்தை தவிர்க்க சிலைகளை கரைக்க உள்ள நாளன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

பாலம் அமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கந்தாகுளம் கிராமத்தில் பாலம் இல்லாத நிலை உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே இக்கிராமத்தில் பாலம் அமைத்துதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், பரமக்குடி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழசெல்வனூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்ராகிம், இளையான்குடி.

ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் கண்மாயில் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கண்மாயில் மழை நீரை சேமிப்பதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசனவசதி பெறுவார்கள். எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

மேலும் செய்திகள்