< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
1 Sep 2022 9:29 PM GMT

புகார் பெட்டி

வாகன ஓட்டிகள் அவதி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் அரியநாயகிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அருணாசலபுரத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாைலயை உடனடியாக சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

முத்துக்குமார், மீனாட்சிபுரம்.

சாலை சீரமைக்கப்படுமா?

பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து நாட்டார்பட்டி ெரயில்வே கேட் வழியாக திப்பணம்பட்டி வரை செல்லும் தார் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருக்கிறது. இதனை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, சாைலயை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மனோ, பாவூர்சத்திரம்.

அறிவிப்பு பலகை அவசியம்

தென்காசி-அம்பை நெடுஞ்சாலையில் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே இருந்து கடையம் மாட்டுச்சந்தை அருகில் வரை சாலையோரம் வாறுகால் அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டிட பொருட்கள் கொட்டப்பட்டு கிடக்கிறது. ஆனால் இந்த பகுதியில் பணி நடைபெறுவதற்கான எந்த ஒரு அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குமரன், கடையம்.

மின்விளக்கு எரியுமா?

கீழக்கடையம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகிறார்கள். எனவே பஸ் நிறுத்தம் பகுதியில் மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.

சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

பாவூர்சத்திரத்தில் இருந்து குறும்பலாபேரி சமுத்திரபுரம் தெருக்கு செல்லும் வழியில் சாைலயில் கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சின்னதம்பி, பாவூர்சத்திரம்.

மேலும் செய்திகள்