< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
1 Sep 2022 2:39 PM GMT

புகார் பெட்டி

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் பஸ் நிலையம் வரும் பயணிகளை அச்சுறுத்துகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார்,ராமநாதபுரம்.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் நாடார் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாய்கள், பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவ்வாறு சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் நாய்கள் துரத்துவதால் இப்பகுதியினர் காயம் அடைகின்றனர்.எனவே இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாகுல், ராமநாதபுரம்.

புதிய கட்டிடம் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பெருமாநேந்தல் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் இல்லை. இதனால் மற்றோரு கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடமும் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் ஒருவித அச்ச உணர்வுடன் கல்விபயிலும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தொண்டி.

கழிப்பறை வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு இலவச கழிப்பறை வசதி இல்லை. இதனால் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.

விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கூகுடி ஊராட்சி விசும்புர் வடக்கு குடியிருப்புக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிலர் மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருவாடானை.

எரியாத மின்விளக்கு

ராமநாதபுரம் மாவட்டம் அச்சந்தன்வயல்- பட்டினம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்ராகிம், ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்