< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
28 Aug 2022 5:27 PM GMT

புகார் பெட்டி

பொதுமக்கள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சுகாதார நிலையத்தில் இடபற்றாக்குறை, மருத்துவர்களின் பற்றாக்குறையால் நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. சரியான கழிப்பறை, வெளியில் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஒழுங்கான நிழற்குடை இல்லை. ஒரே நேரத்தில் அனைவரையும் உள்ளே அனுமதிப்பதால் அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.இந்த தொட்டியில் சேமிக்கப்படும் நீரே இங்கு வருவோர்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த தொட்டியால் இங்கு வருவோர் ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாற்றில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த கண்மாயே இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் நீர்வளம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்றி நீர் வளங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் எட்டியதிடல் வழியாக முத்துப்பட்டினம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூலகம் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்தக்கோட்டை கிராமத்தில் நூலக வசதி இல்லை. இதனால் இந்த கிராமத்தில் படிக்கும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். எனவே இந்த கிராமத்தில் நூலகம் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்