< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
மதுரை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
25 Aug 2022 7:33 PM GMT

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். பெரும் விபத்து அபாயம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

ரஞ்சித், தனக்கன்குளம்.

பெண்கள் சிரமம்

மதுரை காந்தி மியூசியம் அருகே ராஜாஜி பூங்காவில் அமைந்துள்ள பொது கழிவறையானது சேதமடைந்த நிலையில் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுவதுடன் பூங்காவிற்கு வரும் பெண்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கழிவறையை சீரமைக்க வேண்டும்.

ஜாக்கி, காந்தி மியூசியம்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மதுரை மாவட்டம் பழங்காநந்தம் வார்டு எண் 70 பகுதியில் பொது மயானத்திற்கு செல்லும் சாலை சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

கல்யாண், பழங்காநத்தம்.

கிடப்பில் போடப்பட்ட பணி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி ஊராட்சியில் உள்ள பல்கலைநகர் பகுதி வ.உ.சி. நகர் 2வது தெருவில் சாக்கடை அமைக்கும் பணிக்காக தெருவை பெயர்த்து வேலை தொடங்கப்பட்டது. இந்த பணியானது குழித்தோண்டிய நிலையில் கான்கிரீட் கால்வாய் பெயரளவிற்கு அமைத்துவிட்டு, கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரேசன், வடபழஞ்சி.

விபத்து அபாயம்

மதுரை தெற்குவாசல் சின்னக்கடை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் பழுதடைந்து உள்ளது. மேலும் தெற்கு மாரட் வீதி சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக்குமார்,தெற்குவாசல்.

மேலும் செய்திகள்