< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Aug 2022 2:33 PM GMT

புகார் பெட்டி

மின்விளக்கு பொருத்தப்பட்டது

திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்பட்டது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சுகாதார சீர்கேடு

நாககோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டது. தற்போது, பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. குழாய் பதிக்கும் பணியின்போது சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஓடையில் மண் விழுந்தது. தற்போது, பல இடங்களில் கழிவுநீர் வடிந்ேதாட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்ேதாட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், டி.வி.டி.காலனி.

குளத்தை தூர்வார வேண்டும்

திருவிதாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதியில் குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும், குளத்தில் இருந்து உபரிநீர் வாய்க்கால் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்கிறது. தற்போது, குளத்தில் இறைச்சி கழிவுகள், குப்பைகளை சிலர் கொட்டியும், உபரிநீர் கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீரை விடுவதாலும் தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.கிருஷ்ணன், கொல்லாய்.

சேதமடைந்த மின்கம்பம்

குருந்தன்கோடு அருகே சேனாப்பள்ளியில் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிபாகம் முறிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சாலையில் சரிந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பதை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், குருந்தன்கோடு.

பக்தர்கள் அச்சம்

மணவாளக்குறிச்சி அருகில் யானை வரவழைத்த பிள்ளையார்கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுவதால், பாம்பு உள்ளிட்டவையின் வசிப்பிடமாக மாற வாய்ப்புகள் உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதிைய கடந்து செல்கின்றனர். எனவே, புதற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.

போக்குவரத்து நெருக்கடி

குழித்துறை சந்திப்பில் இருந்து பழைய பாலம் செல்லும் சாலையில் ஒரு ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானாவின் இருபுறமும் சாலையோரத்தில் பஸ் நிறுத்துமும் உள்ளது. இதனால், அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரவுண்டானாவை அரை வட்ட அளவில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயக்குமார், படந்தாலுமூடு.

மேலும் செய்திகள்