ராமநாதபுரம்
புகார் பெட்டி
|புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடை அமைக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி தேசிய நெடுஞ்சாலையில் அதிகமான விபத்து ஏற்படுகிறது. இதனால் அரசு உயர்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் சாலையை கடக்கிறார்கள். வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்கள், கொன்னக்குடி, ராமநாதபுரம்
கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இந்த கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க முடியும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், ராமநாதபுரம்.
அடிப்படை வசதி
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கொட்டகுடி ஊராட்சி விளத்தூர் கிராம சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுவதுடன் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், விளத்தூர், ராமநாதபுரம்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் இயங்கும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகள் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
ரமேஷ், திருவாடானை, ராமநாதபுரம்.
கொசுத்தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சரியான தூக்கமின்றி முதியோர், சிறுவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரணி, முதுகுளத்தூர், ராமநாதபுரம்.