< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Aug 2023 6:45 PM GMT

புகார் பெட்டி

பொதுமக்கள் அச்சம்

கொல்லங்கோடு நகராட்சி 2-வது வார்டில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், சாலையோரத்தில் புற்கள் வளர்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகளின் வசிப்பிடமாக மாற வாய்ப்புகள் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சாலையோரத்தில் வளர்ந்துள்ள புற்களை வெட்டி அகற்றி முறையாக பராமரித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபின், கொல்லங்கோடு.

வீணாகும் குடிநீர்

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் தெலுங்கு செட்டித்தெரு உள்ளது. இந்த தெருவின் எதிரே அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வடிகால் ஓடையில் பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்காதர், கிருஷ்ணன்கோவில்.

பழுதடைந்த மின்விளக்கு

சுங்காங்கடையில் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தம் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளதால் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலையை கடப்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கன்னியாகுமரி.

சுகாதார சீர்கேடு

களியக்காவிளை சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் சாலையோரத்தில் ஓடையின் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதாரிகள் நலன்கருதி ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைத்து கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

சேதமடைந்த மின்கம்பம்

கல்லுக்கூட்டம் பஞ்சாத்துக்கு உட்பட்ட ஊற்றுக்குழி சந்திப்பில் இருந்து பெறியாப்பள்ளி, நெடியாங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ் சந்திரபோஸ், ஊற்றுக்குழி.

தொற்றுநோய் பரவும் அபாயம்

நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் இருந்து பார்வதிபுரம் சானல் வரை செல்லும் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் சிலர் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டி தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் புகை மூட்டம் மற்றும் துர்நாற்றம் வீசுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், குப்பையை ெகாட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், புத்தேரி.

மேலும் செய்திகள்