< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
20 July 2023 2:44 AM IST

புகார் பெட்டி

மரம் வெட்டி அகற்றப்பட்டது

இரணியலில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் சாலையில் மடவிளாகம் பகுதியில் பட்டுப்போன மரம் ஒன்று நின்றது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சேதமடைந்த சாலை

மயிலாடி கூண்டு பாலத்தில் இருந்து ஆலடிவிளைக்கு சாலை செல்கிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

குப்பைகளை அகற்ற வேண்டும்

புத்தளம் பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் சில மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், புத்தளம்.

நடவடிக்கை தேவை

ஈத்தாமொழி நெடுஞ்சாலையோரத்தில் தனியார் காய்கறி கடை உள்ளது. இந்த காய்கறி கடையின் அருகில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால் கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, குழாயின் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துகுமார், கன்னியாகுமரி.

பொதுமக்கள் அச்சம்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட செக்கால தெருவில் அங்கன்வாடி அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடிக்கு செல்லும் நடைபாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி செடி, கொடிகளை அகற்றி நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

விபத்து அபாயம்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு தெருவில் சாலையில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு சேதமடைந்த இரும்பு மூடியை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது சபீர், குளச்சல்.

சாலையை சீரமைக்க வேண்டும்

மூவோட்டுகோணத்தில் இருந்து புத்தன்சந்நை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது சாலையை சீரமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளி மாணவர்கள் நலன்கருதி சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரிஜூ, இடைகோடு.

மேலும் செய்திகள்