< Back
மாநில செய்திகள்
போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றியதாக பா.ஜனதா நிர்வாகி மீது புகார்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றியதாக பா.ஜனதா நிர்வாகி மீது புகார்

தினத்தந்தி
|
1 April 2023 12:32 AM IST

போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றியதாக புதுக்கோட்டை பா.ஜனதா நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிலர் புகார் மனு அளித்தனர். இதில் தாங்கள் வசித்து வரும் கோவில் இடத்தை போலி ஆவணம் மூலம் பட்டா மாறுதல் செய்ததாக பா.ஜனதா மாவட்ட நிர்வாகி மீது புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகார் மனுவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதற்கிடையில் அந்த நிலம் தனது மூதாதையர்கள் பெயரில் இருந்து தனது பெயருக்கு மாற்றம் செய்திருப்பதாக பா.ஜனதா நிர்வாகி விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்