< Back
மாநில செய்திகள்
தமிழக கவர்னர் மீது ஜனாதிபதியிடம் புகார்- தி.மு.க. அறிவிப்பு
மாநில செய்திகள்

தமிழக கவர்னர் மீது ஜனாதிபதியிடம் புகார்- தி.மு.க. அறிவிப்பு

தினத்தந்தி
|
16 March 2024 6:58 AM IST

கவர்னர் மாளிகைக்கு எதற்கு மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்? என்று திமுக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், அனைத்து கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், கவர்னர் மாளிகை, பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் பி.எட் மாணவர்களின் வாக்காளர் எண்களை சேகரிக்க அறிவுறுத்தி உள்ளது.

அனைத்து கல்லூரி முதல்வர்களும், வருகிற 19-ந்தேதிக்குள் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை சேகரித்து சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த சுற்றறிக்கையை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேற்று முன்தினம் இரவு திரும்ப பெற்றார். இந்த விவகாரத்தில் தி.மு.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. வில்சன் வெளியிட்டுள்ள பதிவில், 'கவர்னர் மாளிகைக்கு எதற்கு மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்? எல்லை மீறும் கவர்னரின் செயல் குறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்