< Back
மாநில செய்திகள்
சீமான் மீதான புகார்: நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்
மாநில செய்திகள்

சீமான் மீதான புகார்: நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்

தினத்தந்தி
|
1 Sept 2023 2:59 PM IST

நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கோயம்பேடு துணை கமிஷனர் உமையாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் முன்பு விஜயலட்சுமி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடிகை விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ராமாபுரம் காவல் நிலையத்தில் வியலட்சுமியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன் விஜயலட்சுமி ஆஜராகியுள்ளார்.

மேலும் செய்திகள்