நாமக்கல்
தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்கபுதிய இணையதளம்
|நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில் பொதுமக்கள் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் foodsafety.tn.gov.in என்ற புதிய இணையதளம் மற்றும் Tnfood safety Consumer App என்ற கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புகார்களின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளிக்கப்பட்டு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புகாா்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.