< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் போராட்டம்  குடிநீருடன், சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் போராட்டம் குடிநீருடன், சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார்

தினத்தந்தி
|
21 May 2022 4:41 PM GMT

நாமக்கல்லில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் போராட்டம் குடிநீருடன், சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார்

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று வீதியில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால், அதில் தேங்கும் கழிவுநீர் குடிநீர் குழாயில் உள்ள உடைப்பு வழியாக புகுந்து விடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்