< Back
மாநில செய்திகள்
விசாரணைக்கு அழைத்து சென்று பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் ..!
மாநில செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்று பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் ..!

தினத்தந்தி
|
27 March 2023 6:55 AM IST

விசாரணைக்கு அழைத்து சென்று பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமதுசபீர் ஆலமை நியமித்து உள்ளார்.

இதற்கிடையே சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங்கிடம் தொலைபேசியில், பற்களை பிடுங்கியது தொடர்பாக விளக்கம் கேட்ட உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகள்