< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வு: நவம்பர் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
|25 Oct 2023 11:45 PM IST
ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அரசு பள்ளிகளில் உள்ள 2,222 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வு வரும் 2024 ஜனவரி 7-ந்தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஆன்லைன் மூலமாக போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு போட்டித்தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149-ஐ பின்பற்றி நடைபெறும் இந்த தேர்வில் பங்கேற்க, ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ல் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.