< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
போலீசாரின் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு
|5 July 2022 1:04 AM IST
போலீசாரின் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படி கயர்லாபாத் போலீஸ் நிலைய காவலர் குடியிருப்பில் காவலர் குடும்ப விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அரியலூர் உட்கோட்ட (பொறுப்பு) துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமை தாங்கினார். அரியலூர் இன்ஸ்பெக்டர், கயர்லபாத் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். போலீசார் குடும்பத்தினருடன் கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு போட்டி போன்ற இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.