< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
உலக ஈர நிலங்கள் தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்
|3 Feb 2023 12:00 AM IST
உலக ஈர நிலங்கள் தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில் உலக ஈர நிலங்கள் தினத்தையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியம், ஸ்லோகன் போட்டி, வினாடி-வினா மற்றும் தத்ரூபமாக புகைப்படம் எடுப்பது போன்ற போட்டிகள் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதில் வன சரக அலுவலர்கள் பழனிகுமரன் (பெரம்பலூர்), மாதேஸ்வரன் (வேப்பந்தட்டை), சத்யா (சமூக வனச்சரகம்) மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வன காவலர்கள் கலந்து கொண்டனர்.