தர்மபுரி
தர்மபுரியில்தேசிய விளையாட்டு தின போட்டிகள்நாளை நடக்கிறது
|தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) தேசிய விளையாட்டு தின போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தின போட்டிகள் நாளை நடைபெற உள்ளது. 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கைப்பந்து மற்றும் 100 மீட்டர் தடகள போட்டிகளும், 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் தடகள போட்டிகளும், 45 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 1கி.மீ நடைபோட்டிகளும் நடைபெறும். 19 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 01.01.2005-க்கு பின்னர் பிறந்தவர்களும், 25 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 01.01.1999-க்கு பின்னர் பிறந்தவர்களும், 45 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 01.01.1979-க்கு பின்னர் பிறந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நாளை காலை 8 மணிக்கு உரிய ஆவணங்களுடன் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.