< Back
மாநில செய்திகள்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
நாமக்கல்
மாநில செய்திகள்

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

தினத்தந்தி
|
30 Oct 2022 12:15 AM IST

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31-ந் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நாளை (திங்கட்கிழமை) முதல் நவம்பர் மாதம் 6-ந் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் `வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா' என்கிற கருத்தை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் `நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா' என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்த சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரை போட்டி நடத்தி ஒவ்வொரு பள்ளி, கல்லூரியில் இருந்தும் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களை தேர்வு செய்து அந்த விவரத்தினை வருகிற 4-ந் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்