திருவாரூர்
குறுவை நெற்பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
|குறுவை நெற்பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
குறுவை நெற்பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
காவிரி நீர் பற்றாக்குறை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீர் பற்றாக்குறையால் குறுவை பயிர்கள் கருகுவதை பார்த்து விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இனி குறுவை பயிரை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. உடனடியாக உயர்மட்ட குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்
இழப்பீடு
3-வது ஆண்டாக குறுவை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாமல் தமிழக அரசு கைவிட்டதால் விவசாயிகள் காப்பீடு செய்து இழப்பீடு பெற முடியாத நிலையில் பாதிப்புக்கு தமிழக அரசே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.
உழவர் நலவாரியத்தை உழவர்களை கொண்டு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சநாதன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் அக்ரி அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.