திருவள்ளூர்
கடம்பத்தூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பயணிகள் கோரிக்கை
|கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.
சுரங்கப்பாதை
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் கடம்பத்தூர் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினந்தோறும் புதுமாவிலங்கை, அகரம், சத்தரை, பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, கீழச்சேரி, மப்பேடு, சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், களாம்பாக்கம், போன்ற சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என திரளான பயணிகள் ரெயில் மூலம் சென்னை, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.
கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை சுலபமாக கடந்து செல்ல சுரங்கப்பாதை இல்லை. மேலும் பயணிகள் தண்டலாளத்தை கடந்து செல்ல அமைக்கப்பட்ட சிமெண்டு தளங்கள் ரெயில் பணிகள் காரணமாக தோட்டப்பட்டது. அனால் மறுபடியும் சீரமைக்கப்படவில்லை.
கோரிக்கை
இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வயதான பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என பலதரப்பட்ட மக்களும் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர் தண்டவாளத்தில் நடந்து செல்லும்போது அடிக்கடி ரெயில் மோதி பயணிகள் உயிரிழந்து வரும் சம்பவம் இங்கு தொடர்கதையாக நடந்து வருகிறது.
எனவே கடம்பத்தூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரெயிவே துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.