< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

திருப்பத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
27 Sep 2023 6:45 PM GMT

திருப்பத்தூரில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு பொருட்கள் மற்றும் தனது சார்பில் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சேலை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். முன்னதாக அவர் பேசுகையில், பெண்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, ஆண்களுக்கு நிகராக பெண்கள் திகழும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருகாலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவார்கள். ஏழை வீட்டில் பிறந்த கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு என்பது கனவாகவே இருந்தது.

6,418 கர்ப்பிணிகள்

இங்கே ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி அனைத்து மதத்தை சார்ந்த கர்ப்பிணிகள் அனைவருக்கும் இவ்விழாவின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 6,481 கர்ப்பிணிகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முகவடிவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், நகர செயலாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் உதயசண்முகம், திருப்பத்தூர் பேரூராட்சி துணை தலைவர் கான்முகமது, துணை இயக்குனர் விஜய்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட்ராஜ், ஹரி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்