< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தினத்தந்தி
|
18 Oct 2023 12:02 AM IST

முதுகுளத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.

முதுகுளத்தூர்,

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஷ்வாவதி, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், கல்லூரி முதல்வர் பாண்டிமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சசிகலா அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சீதன பொருட்கள் மற்றும் இலவச சேலைகளை வழங்கினார். இதில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி, துணை அலுவலர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், ஜெயபால் பூபதிமணி, குலாம் முகைதீன், கோவிந்தராஜ், வாசுதேவன், மனோகரன், சண்முகநாதன், முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஜானகி, அன்பு கண்ணன், அமைச்சர் நேர்முக உதவியாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் சண்முகசுந்தரி, இந்திராணி, ராஜேஸ்வரி ஒருங்கிணைப்பாளர் இருளாகி, நகரச்செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி ராமர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வடமலையான், சட்டமன்ற உதவியாளர்கள் சத்தியேந்திரன், டோனி தாமஸ், ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்