< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
|2 Oct 2023 2:50 AM IST
பாளையங்கோட்டையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் நெல்லை வட்டாரம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள பல்நோக்கு கலையரங்கத்தில் நேற்று சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோசிட்டா தலைமை தாங்கினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு 117 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், பழங்கள், முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள்.
மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.