தென்காசி
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
|சங்கரன்கோவிலில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சங்கரன்கோவில் நகராட்சி பகுதியைச் சேர்ந்த 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் மல்லிகா, செல்வம், முத்துப்பாண்டி, அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.