< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தினத்தந்தி
|
30 Sept 2023 1:03 AM IST

மானூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

பேட்டை:

நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் சமுதாய வளைகாப்பு விழா, மானுர் யூனியன் பாலாமடை கிராமத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் கலந்துகொண்டு சுமார் 120 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்களை பெண்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட குழந்தைகள் திட்ட அலுவலர் இந்திரா, பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி, மானூர் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, துணைத்தலைவர் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தா தேவி, சமூக ஆர்வலர் அங்கப்பன், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், சங்கர், கள்ளத்தியான், மானூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மதிராஜ பிரியா மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்