< Back
மாநில செய்திகள்
200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கரூர்
மாநில செய்திகள்

200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தினத்தந்தி
|
6 Oct 2023 6:54 PM GMT

200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

கரூரில் நேற்று ஒரு திருமண மண்டபத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் தாந்தோணிமலை வட்டாரங்களை சேர்ந்த 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசுகையில், கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அடிக்கடி அங்கன்வாடி பணியாளர் கூறிய நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும், என்றார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கர்ப்பிணிகளுக்கு 5 வகையான கலவை சாதங்களுடன் சாப்பாடு வழங்கப்பட்டது.இதில், கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) குறள்செல்வி, கஸ்தூரிபாய் மருத்துவமனை மருத்துவர் திவ்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்