< Back
மாநில செய்திகள்
130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தினத்தந்தி
|
8 Oct 2023 1:00 AM IST

வால்பாறையில் 130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது.

வால்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. திட்ட அலுவலர் ரதிப்பிரியா தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில் குமார் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்பட 130 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு சேலை, பூ மாலை, பூ, பொட்டு, குங்குமம், மஞ்சள் கயிறு, பழங்கள் ஆகியவை சில்வர் தட்டில் வைத்து சீர்வரிசையாக வழங்கப்பட்டது. இதனை மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் சுதாகர் ஆகியோர் வழங்கினர். முடிவில் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் அனீஷ் குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட மேற்பார்வையாளர் புஷ்பா, அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து செய்திருந்தார். இதையொட்டி சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய கண்காட்சி நடத்தப்பட்டது. பின்னர் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்