தர்மபுரி
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
|பென்னாகரத்தில் நடந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. 250 பேருக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
பென்னாகரம்:
பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட குழந்தைகள் திட்ட அலுவலர் வின்ஜான்சிராணி தலைமை தாங்கினார். வட்டார உதவி திட்ட அலுவலர் சித்ரா வரவேற்று பேசினார். ஒன்றிய குழு தலைவர்கள் கவிதா ராமகிருஷ்ணன், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏரியூர், பென்னாகரம் ஒன்றியங்களை சேர்ந்த 250 கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு செய்து சீர்வரிசைகளை வழங்கினர். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கையேடும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார உதவி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, சுகந்திரம் பிரியா, பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திர பாபு, தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், வன்னியர் சங்க மாநிலத்துணைத் தலைவர் பாடி செல்வம், பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார். இளைஞர் சங்கர் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.