திண்டுக்கல்
சமுதாய வளைகாப்பு விழா
|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் தலைமை தாங்கினார். சாணார்பட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 101 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
முன்னதாக சாணார்பட்டி ஒன்றியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் மதிப்பில் பொம்மையகவுண்டன்பட்டி, மேட்டுக்கடையில் கட்டப்பட்ட நாடக மேடைகள், ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வேலம்பட்டி பயணியர் நிழற்கூடம் ஆகியவற்றை எம்.பி.வேலுச்சாமி திறந்து வைத்தார்.
விழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரராஜன், சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் தர்மராஜன், மோகன், நத்தம் பேரூராட்சி தலைவர் பாட்ஷா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளையராஜா, அருள்கலாவதி, வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.