திருவாரூர்
சமுதாய வளைகாப்பு விழா
|கொரடாச்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா
கொரடாச்சேரி:
கொரடாச்சேரியில், அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர் உமா பிரியா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோபா, பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை, திருவாரூர் எம்.எல்.ஏ. மற்றும் கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் வழங்கினர். இதில் கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயகுமாரி, பானுப்பிரியா, கொரடாச்சேரி தி.மு.க. பேரூராட்சி செயலாளர் கலைவேந்தன், ஒன்றியக்குழு, பேரூராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி வரவேற்றார். முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சுமதி நன்றி கூறினார்.