< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
சமுதாய வளைகாப்பு
|16 Oct 2023 12:15 AM IST
மன்னார்குடியில் சமுதாய வளைகாப்பு
மன்னார்குடி:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மன்னார்குடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னார்குடி நகர்மன்ற துணை தலைவர் கைலாசம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் செல்வ விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகையன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் ராணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மீனா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான பழங்கள் உள்ளிட்ட 20 வகையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.