புதுக்கோட்டை
சமுதாய வளைகாப்பு விழா
|புதுக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் ரகுபதி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.
வளைகாப்பு விழா
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ், சமுதாய வளைகாப்பு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி, உணவு பரிமாறினார்.
அதன்பின்னர் அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இவ்வாண்டும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
1,300 கர்ப்பிணிகளுக்கு...
கடந்த 2 ஆண்டுகளில் 1,300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பானது நடத்தப்பட்டுள்ளது, என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.