< Back
மாநில செய்திகள்
புன்னம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
கரூர்
மாநில செய்திகள்

புன்னம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
16 Jun 2022 6:19 PM GMT

புன்னம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நொய்யல்,

கருத்து கேட்பு கூட்டம்

கரூர் மாவட்டம், புன்னம் கிராமத்தில் தனியார் கல்குவாரி அமைப்பது குறித்த பொதுக்கள் கருத்து கேட்பு கூட்டம் பாலமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கலந்து கொண்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பேசுகையில், புன்னம் கிராமத்தில் 2.58 எக்ேடர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது. கல் குவாரிகளில் கனிம வளம் சுரண்டப்படுகிறது.

அரசு விதிகள் கடைப்பிடிப்பதில்லை

அதேபோல் கல் குவாரிகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படுவதில்லை. கல்குவாரிகள் அதிக அரசு அனுமதித்தது விட அதிக ஆழத்தில் வெட்டப்பட்டு வருகிறது. காலாவதியான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கல்குவாரிகள் காலை முதல் விடிய, விடிய செயல்படுகிறது. தொடர்ந்து அதிக சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கல்குவாரியில் அதிக ஆழம் வெட்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். கல்குவாரி நடத்துபவர்கள் அரசு விதிகளை கடைப்பிடிப்பதில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதேபோல காவிரி ஆறு சாக்கடையாக ஓடுகிறது. சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்த்து பிழைப்பு தனம் செய்கிறார்கள். அதிக அளவு கல்குவாரிகள் உருவாவதால் தண்ணீரின் நீர்மட்டம் மிகவும் குறைந்து வருகிறது. நான் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்