சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கக் கோரி கம்யூனிஸ்ட், வி.சி.க. தலைவர்கள் ஐகோர்ட்டில் மனு
|சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் வி.சி.க. சார்பில் நடைபெற இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வி.சி.க. தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் உடன் தங்களை ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது என அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.