< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
11 May 2023 1:36 AM IST

அம்பையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பை:

அம்பையில் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பை அரசு ஆஸ்பத்திரியில் போதுமான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்களை பெற்றோர் பார்வையிடும்படி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லட்சுமணன், வங்கி ஊழியர் சங்கம் ரெங்கன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் முருகன் மற்றும் பலர் பேசினர். நகர துணைச் செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்