கடலூர்
விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தை தலைமை இடமாகக்கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிகரான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், இருளக்குறிச்சி ஊராட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் பெயரில் நடந்த ஊழல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடு கட்டாத பயனாளிகளுக்கு உடனே வீடு கட்டி கொடுக்க வேண்டும், பூண்டியாங்குப்பத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், வெள்ளாற்றில் கார்மாங்குடியில் ஆற்றில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீர் மேம்பட வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தினர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்டச் செயலாளர் ராவணராஜன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாகிகள் குளோப், பாஸ்கர், அறிவழகி, சுப்பிரமணியன், நகர செயலாளர் விஜயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.