< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
2 Aug 2022 6:23 PM IST

கயத்தாறு அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்ன காலனியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சின்ன காலனி கிளை செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். கரடிகுளம் பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும். கரடிகுளம் சின்ன காலனியில் புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் மகேந்திரசிங், ஒன்றிய துணைச் செயலாளர் சங்கரலிங்கம், கழுகுமலை நகர செயலாளர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்