தூத்துக்குடி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு எம்.சாண்டு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கரும்பன், நகர செயலாளர் சரோஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், பரமராஜ் மற்றும் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எம்.சாண்டு மணல் விலையை தனியார் குவாரி உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர். இதனால் லாரி உரிமையாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எம்.சாண்டு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இதில் அரசு தலையிட்டு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீது உதவி கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.