< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
18 Aug 2023 5:30 AM IST

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஆயக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஆயக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டக்குழு உறுப்பினர் அரவிந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் (கலை-இலக்கியம்) வெங்கடேஷ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது ஆயக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும், போதிய மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்